தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட 27 பேருக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தால் நேற்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் இன்றும் நாளையும் போராட்டம் செய்ய வேண்டாம் என்று அறிவித்தே இந்தத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தையிட்டி பகுதியில் உள்ள திஸ்ஸ விகாரையானது சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்து அப்பகுதியில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில், பொசன் போயா தினமான இன்றும் நாளையும் குறித்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட 27 பேருக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் பலாலி பொலிஸாரினால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் கட்டளையொன்றும் பெறப்பட்டு போராட்ட பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது.