தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புலிகளை திருப்திப்படுத்தும் விதத்திலேயே செயற்படுகின்றது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா கூறியவை வருமாறு,
" தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு புலி டயஸ்போராக்களுடன் கொடுக்கல், வாங்கல் இருக்கின்றது. அது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதனால்தான் இராணுவத்தினரை சிப்பாயென விளிக்கின்றனர். புலிகளின் பக்கம் நின்று கதைக்கின்றனர்.
அவர்கள் (தேசிய மக்கள் சக்தி) புலிகளை திருப்திப்படுத்துகின்ற முயற்சியில் இறங்கியுள்ளனர். இது அனைவருக்கும் புரிக்கின்றது. இந்த அரசாங்கம் இராணுவத்தின் பக்கம் அல்ல, புலிகளின் பக்கமே நிற்கின்றது.
அதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டம் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம். அதற்குரிய நடவடிக்கை இடம்பெறும்வரை அச்சட்டம் பயன்படுத்தவும் கூடாது. ஆனால் தேசிய மக்கள் சக்தி அச்சட்டத்தை பயன்படுத்திவருகின்றது." - என்றார்.