ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச எதிர்வரும் 15 ஆம் திகதி மீண்டும் யாழ்ப்பாணம் வரவுள்ளார்.
யாழ்.மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடுவதற்காகவே அவர் செல்கின்றார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலுக்குரிய பிரச்சார நடவடிக்கைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றது. சஜித்தின் கடைசி பிரசாரக் கூட்டம் 18 ஆம் திகதி கொழும்பை மையப்படுத்தியதாக அமையவுள்ளது.