இலங்கையை இரண்டாக பிளவுபடுத்தும் இந்தியாவின் தேவையை நிறைவேற்றுவதற்காகவே புலிகள் முன்னிலையானார்கள் என்று பேராசிரியர் இந்துராகரே தம்மரதன தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
'தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் நன்மைக்காக முன்னிலையான அமைப்பு கிடையாது. நாட்டை இரண்டாக பிளவுபடுத்தும் இந்தியாவின் தேவைப்பாட்டுக்காகவே அவர்கள் முன்னிலையானார்கள்.
நாட்டை பிளவுபடுத்தும் இந்தியாவின் தேவைப்பாடு இன்றளவிலும் துளிகூட மாறவில்லை." - எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தத்தை இலங்கையால் மீற முடியுமா? அவ்வாறு நாம் ஒப்பந்தத்தை முறிந்துக்கொண்டால் எம்மை அவர்கள் தாக்கக்கூடும்.
சிலவேளை ஒப்பந்தத்தை இந்தியா முறித்துக்கொண்டால் எம்மால் அந்நாட்டை தாக்க முடியுமா? எனவே, பெரியவர்களுடன் சிறியவர்கள் ஒப்பந்தம் கைச்சாத்திடும்போது அவதானம் தேவை. ட்ரம்ப் வரிபோல் எதிர்காலத்தில் மோடி வரிகூட விதிக்கப்படலாம்." - என தேரர் மேலும் குறிப்பிட்டார்.