யாழ்ப்பாணம் - செம்மணி மனி தப் புதைகுழிக்கு நீதி கோரி கொழும்பில் இன்று பெரும் கவனவீர்ப்புப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேரணியாகச் செல்லமுயன்ற வேளை பொலிஸார் தடுத்துநிறுத்தியதால் குழப்ப நிலை ஏற்பட்டது.
செம்மணி மனிதப் புதைகுழிக்குநீதி கோரி கொழும்பு, கோட்டை ரயில்நிலையத்துக்கு முன்னால் நீதிக்கானமக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில்பெருமளவானவாகள் கலந்துகொண்டிருந்தனர்.
“செம்மணி உட்பட அனைத்து புதைகுழிகளுக்குமான நீதிக்கான குரலைப்பலப்படுத்துவோம். ஆட்சியாளர்கள்மீது நம்பிக்கை இல்லை என்பதைஉலகுக்குக் கூறுவோம். சர்வதேச தரத்திலான அகழ்வுப் பணி மட்டுமல்ல நீதிக்
கான சர்வதேசத்தின் தலையீட்டையும், குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத் தப்படவும் ஓங்கிக் குரல் எழுப்புவோம்." - என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள், செம்மணியில் எலும்புகளாக எம்மவர்கள்... சர்வதேசமே தமிழர்களை ஏமாற்றாதே!, போர்க் குற்றத் தின் சாட்சி செம்மணி, வடக்கு, கிழக்கில்நில ஆக்கிரமிப்பை நிறுத்து” போன்ற பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
போராட்டக்காரர்கள் முன்னோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்ற வேளை பொலிஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
போராட்டக்காரர்கள் தங்களை முன்னோக்கிச் செல்வதற்கு அனுமதிக்குமாறுபொலிஸாரிடம் வேண்டுகோள் விடுத்த போதிலும் பொலிஸார் அதற்கு அனு மதிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து போராட்டக் காரர்கள் முன்னோக்கி நகர முற்பட்டவேளை பொலிஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தியதால் குழப்ப நிலை ஏற்பட்டது.