தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி உள்ளிட்டோர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வெலிக்கடை படுகொலை சம்பவம் தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் என்று ரெலோவின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
" வெலிக்கடை சிறைச்சாலையில் கண்கள் பிடுங்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டே தோழர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அவர்கள் எங்கே புதைக்கப்பட்டார்கள் என்பதை அறியமுடியாமல் உள்ளது. எனவே, கடந்தகால கொலைகள் பற்றி விசாரிக்கும் இந்த அரசாங்கம், வெலிக்கடை படுகொலை பற்றியும் விசாரிக்க வேண்டும். ஜே.ஆர். ஜயவர்தன ஆட்சிக்காலத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றது." - எனவும் செல்வம் எம்.பி. குறிப்பிட்டார்.