யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பெய்த மழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது.
யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது.
அந்தக் கட்டடம் உடைந்து விழும் நிலையில் காணப்பட்டது. அதனை அடுத்து அதற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் நடப்பட்டிருந்தன. அந்த கம்பிகள் அண்மையில் திருட்டு போன நிலையில் , குறித்த பகுதி இடிந்து விழுந்துள்ளது.
அதேவேளை மந்திரி மனையானது தனிநபர் ஒருவருக்கு சொந்தமானது என்பதனால் , அதனை தொல்லியல் திணைக்களம் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் எடுத்து புனரமைப்பு பணிகளை முன்னெடுக்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.