தியாக தீபம் திலீபனின் 33வது நினைவு தினத்தை முன்னிட்டு தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (23) யாழ் புங்குடுதீவு பகுதியில் தியாக தீபம் திலீபனின் உருவப்படம் தாங்கிய ஊர்தி பவனி ஆரம்பமாகி நடைபெற்றது.
தியாகி தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இவ் ஊர்தி பவனியானது புங்குடுதீவு பகுதியின் மக்கள் அஞ்சலிக்காக முக்கியமான இடங்களில் தரித்து நின்று அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொண்டது.
இந்த ஊர்தி பவனிக்கு யாழ் தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டாளர்கள் வேலனை பிரதேச சபை உறுப்பினர்கள் புங்குடுதீவு பிரதேச பாடசாலை மாணவர்கள் மக்கள் ஆகியோர் உணர்வு ரீதியாக அஞ்சலி செலுத்தினர்.