சாவகச்சேரி சங்கத்தானைப் பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். இச்சம்பவம் சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு முன்பாக இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
ரயில் கடவையை நடந்து கடக்க முற்பட்ட வேளையில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த அதிவேக ரயிலில் சிக்கியே அவர் இறந்துள்ளார்.
வீரசிங்கம் மத்திய கல்லூரியில் கல்விகற்கும் மாணவனான பானுஜன் (வயது 17) என்பவரே உயிரிழந்தவராவர்.