ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் வரவு-செலவுத் திட்ட உரையை நிகழ்த்திக் கொண்டிருக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சபையில் படுத்துறங்கும் காட்சி தொடர்பான படம் மற்றும் காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.
இது தொடர்பில் நெட்டிசன்கள் பலகோணங்களில் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் தூங்குகின்றனர் என காரசாரமாக விமர்சித்த அர்ச்சுனாவே, தற்போது தூங்குகின்றார்….வட போச்சே என ஒருவர் பதிவிட்டுள்ளார்.அர்ச்சுனா கும்பகர்ணனாக மாறிவிட்டார் என மற்றுமொருவர் பதிவிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் இன்று முன்வைக்கப்பட்டு, அதிலுள்ள முன்மொழிவுகள் ஜனாதிபதியால் வாசிக்கப்பட்டுவருகின்றது.
இவ்வேளையிலேயே கதிரையில் அமர்ந்தபடி தூங்குகின்றார் அர்ச்சுனா எம்.பி.