தமிழீழ தேசிய மாவீரர் நாள் நேற்று உணர்வுபூர்வமாக ஆரம்பமாகியுள்ள நிலையில், நல்லூரில் மாவீரர் நினைவாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தாயக விடுதலைப் போரில் உயிர் நீத்த மாவீரர்களின் பெயர்கள் தாங்கிய கல்வெட்டுகளுடன் இந்த மாவீரர் நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவாலயம் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.