“ தமிழ்த் தேசியத்தின்பால் செயற்படும் அனைத்து தமிழ்க் கட்சிகளையும் இணைத்து செயற்படுத்துவதை நாம் விரும்புகின்றோம். இதற்காக ஏற்கனவே இணைந்து செயற்படும் கட்சிகளுடன் கலந்துரையாடி வருகின்றோம். அவ்வாறே தற்போது அடுத்த கட்டத்தை நோக்கிச் செல் வதற்காகச் சந்திப்புகள் இடம்பெற்று வருகின்றன."
- இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசி யக் கூட்டணியின் பங்காளிக் கட்சியான புளொட்டின் தலைவரும் முன்னாள் நாடா ளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தி னம் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பு மற்றும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பில் கேட்டபோதே சித்தார்த்தன் மேற்கண்டவாறு கூறினார்.
“நாடாளுமன்றத் தேர்தலுக்கு அப்பால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், மாற்றுக் கட்சி களை ஆதரித்தவர்களின் மனவெளிப் பாடுகள் தொடர்பாக மக்கள் அதிருப்தி யடைந்துள்ளதை நாங்கள் அறிந்து கொண் டதுடன் மக்களே எம்மை நோக்கி வருவதையும் நாம் அவதானித்து வருகின் றோம்.
இவ்வாறான சூழலில் அடுத்தகட்ட நகர்வுகளை மக்களின் தேவைகளை நாம் நிறைவேற்றிகொள்வதற்கு நாங் கள் முதலில் ஒன்றிணைய வேண்டும்.
குறிப்பாக தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் இருக்கின்ற தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்ற மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் பொறுப்பு எங்கள் ஒவ்வொருவரிடமும் உள்ளது. அந்தவகையில் நாம் சந்திப்புகளில் மாகாண சபைத் தேர்தல்,
அரசமைப்பு தொடர்பாகப் பேசி வருகின்றோம். அடுத்த கட்டமாக தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணைத்து ஒரே குடை யின் கீழ் செயற்பட வேண்டும் என்ற நிலையை உருவாக்க வேண்டும். அதற் கான முயற்சிகளை மேற்கொண்டு வரு கின்றோம்.
நாங்கள் பிரிந்து நிற்பதால் எதை யும் சாதிக்கப் போவதில்லை. நாங்கள் பிரிவது மாற்று சக்திகளுக்கே சாதமாக மாறிவிடும். இதனால தமிழ் மக்களின் கோரிக்கைகள், அரசியல் தீர்வு விடயங் கள் அடிபட்டுப் போகும் நிலையை ஏற் படுத்திவிடும். எனவே, இதற்கு நாங் கள் இடம்கொடுக்கக் கூடாது. எமது ஒற் றுமையைத்தான் எமது மக்களும் சர்வ தேச நாடுகளும் விரும்புகின்றன.” எனவும் தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டார்.