ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் போண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இலங்கையர் எவரும் காயமடையவில்லை என வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் மேலும் ஆராய்ந்து வருவதாகவும், தகவல்களை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.