" சுனாமி பேரிடரின்போது சுனாமி நிவாரண மண்டலத்தை புலிகளுக்கு வழங்குவதற்கு வெளிநாட்டு முயற்சி இடம்பெற்றது. எனவே, தற்போதைய பேரிடரிலும் வேறு ஆட்டங்கள் இடம்பெறக்கூடும். எனவே, விழிப்பாகவே இருக்க வேண்டும்."
இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
“ அநுரகுமார திஸாநாயக்கவால்தான் இலங்கையை மீட்டெடுக்க முடியும் என அமெரிக்க இராஜதந்திரிகள் நற்சான்றிதழ் வழங்கிவருகின்றனர்.
புயங்கரவாத அமைப்பான புலிகளை தோற்கடித்து, 6 சதவீத பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்திய மஹிந்த ராஜபக்சவுக்குகூட இப்படியான பாராட்டு வழங்கப்படவில்லை. ஆனால் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வழங்கப்படுகின்றது. இதன் இரகசியம் - பின்புலம் என்னவென்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இலங்கை மீண்டெழுவதற்கு பில்லியன் கணக்கில் நிதி தேவைப்படும்போது ஓரிரு மில்லியன்களை உதவியாக பெற்று மீள முடியுமா?
சர்வதேச உதவிகள் இலவசமாகக் கிடைக்கப்பெறுவதில்லை. அதன் பின்னணியில் வேறு நிகழ்ச்சி நிரல் இருக்கக்கூடும்.
சுனாமி காலத்தில் புலிகளுக்கு நிவாரண சபையை வழங்க முற்பட . பேரிடருக்கு மத்தியில் வேறு ஆட்டம் ஆடப்படலாம். தற்போதும் அவ்வாறு நடக்கக்கூடும். எனவே, விழிப்பாகவே இருக்க வேண்டும்.எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.