டித்வா புயல் தாக்கத்தையடுத்து ஏற்பட்ட பேரிடரால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பான உத்தேச மதிப்பீட்டு அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.
உலக வங்கியால் மேற்படி அறிக்கை கையளிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் தொடர்பில் மதிப்பீடு செய்து ஏற்பட்ட இழப்பு தொடர்பான அறிக்கையை வழங்குமாறு உலக வங்கியிடம் இலங்கை கோரி இருந்தது.
இதற்கான உத்தேச மதிப்பீட்டு அறிக்கையே இவ்வாறு கையளிக்கப்படவுள்ளது.
அதேவேளை, முழுமையான சேதம் தொடர்பான துல்லியமான தகவல்களை பெறுவதற்குரிய மதிப்பீட்டு நடவடிக்கைக்கு 3 மாதங்கள்வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.