இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று மாலை இலங்கை வந்தடைந்தார்.
இலங்கை சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ,இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
ஜெய்சங்கர் இந்தியப் பிரதமர் மோடியின் சிறப்பு தூதுவராக சிறிலங்கா செல்வதாக இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் நாளை சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
அதேவேளை நாளை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களையும் அவர் சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.