இலங்கைக்கு 450 மில்லியன் டொலர் பேரிடர் மீளமைப்பு நிதியை வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு தூதுவராக கொழும்பு வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சற்று முன்னர் இதனை அறிவித்துள்ளார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தைச் சந்தித்துப் பேச்சு நடத்திய பின்னர், தற்போது நடந்து வரும் கூட்டு செய்தியாளர் சந்திப்பில் ஜெய்சங்கர் இந்த உதவிப் பொதியை அறிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமரின் உத்தரவின் பேரில் வழங்கப்படும் இந்த உதவிப் பொதியில் 350 மில்லியன் டொலர் சலுகைகடனாகவும், 100 மில்லியன் டொலர் கொடையாகவும் வழங்கப்படும் என்றும், இலங்கைஅரசாங்கத்துடன் கலந்து பேசி இந்த உதவிப் பொதி இறுதி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.