முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ , பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அரச வளங்களை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ இன்று முன்னிலையானார்.
அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னரே கைது இடம்பெற்றுள்ளது. அவரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.
சதொசவுக்கு லொறி உள்ளிட்ட வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜொன்ஸ்டர் பெர்னாண்டோவின் மகன் ஜொஹான் பெர்னாண்டோ வும் கைது செய்யப்பட்டுள்ளார்.
எப்.சி.ஐ.டியினரால் கடந்த 30 ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவர், ஜனவரி 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.