கல்வி அமைச்சராகவும் செயல்படும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று நடைபெற்றது.
நாடாளுமன்ற வளாகத்திலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தங்கள் மாணவர்களின் மனதிற்கு பொருத்தமற்ற பல விடயங்களையும், பாட அலகுத் தொகுதிகளில் பல்வேறு பிழைகளைக் கொண்டு காணப்படுவது மற்றும் இது தொடர்பாக சரியான நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டே நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.
மேற்படி சந்திப்பில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்களான கயந்த கருணாதிலக, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, மனோ கணேசன், பழனி திகாம்பரம், ராதாகிருஷ்ணன் உட்பட பல நாடாளுமன்ற உறுபினர்கள் கலந்துகொண்டனர்.
அதேவேளை, குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் முதலாவது கையொப்பத்தை எதிர்க்கட்சி தலைவர் இட்டுள்ளார். அதன் பின்னர் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ளனர்.