இலங்கை அரசியலில் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பேர்போன விமல்வீரவன்ச, இன்று சத்தியாகிரகப் போராட்டத்தில் குதித்துள்ளார்.
கல்வி அமைச்சுக்கு முன்னால் கட்சி சகாக்களுடன் திரண்டு வந்து அவர் போராட்டத்தில் குதித்துள்ளார்.
புதிய கல்வி மறுசீரமைப்பை கைவிடுமாறும், கல்வி அமைச்சர் பதவியில் இருந்து ஹரிணி அமரசூரிய பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுமே இப்போராட்டம் இடம்பெறுகின்றது.
புதிய கல்வி சீர்திருத்தங்களை அரசாங்கம் மீளப் பெறும் வரை போராட்டம் தொடரும் என விமலும், அவரின் சகாக்களும் தெரிவித்துள்ளனர்.
கல்வி மறுசீரமைப்பை உடன் கைவிடு, கோ ஹோம் ஹரிணி என்று கோஷங்கள் எழுப்படுகின்றன.
ஐ.நா. பொதுச்செயலாளருக்கு எதிராக விமல் வீரவன்சவால் முன்னெடுக்கப்பட்ட சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டம் அரசியல் நாடகமென தற்போதுவரை விமர்சிக்கப்பட்டுவருகின்றது.
கடந்த பொதுத்தேர்தலில் விமல்வீரவன்ச போட்டியிடவில்லை. பிரதான கட்சிகளுடன் அவருக்கு கூட்டணி உறவும் இல்லை.
இந்நிலையிலேயே தனது அரசியல் இருப்புக்காக அவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.