ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்.மண்ணில் நடை பயிற்சியில் ஈடுபடும் காணொளி வைரலாகியுள்ளது.
தனக்கு காலை வணக்கம் சொன்ன இளைஞர் ஒருவருக்கு ஜனாதிபதி தமிழில் பதில் அளிப்பதும் பலரது பாராட்டடை பெற்றுள்ளது.
தைப்பொங்கல் நிகழ்வு மற்றும் அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
பொங்கல் நிகழ்வுகளில் நேற்று பங்கேற்ற ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை ஜனாதிபதி நடை பயிற்சியில் ஈடுபட்டார். அவரை சூழ விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பளித்தனர்.
ஜனாதிபதி நடந்து செல்லும்போது இளைஞர் ஒருவர் "குட்மோர்னிங் சேர்" எனக் குறிப்பிடுவார்.
அதற்கு கை காட்டி, "நான் போய்ட்டு வாரன்" என ஜனாதிபதி பதிலளிப்பார்.
மறுமுனையில் இருந்த இளைஞர் நன்றி எனக் குறிப்பிடுவார்.
இது தொடர்பான காணொளி தற்போது சமூகவலைத்தளங்களை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது.