தேவையான அளவுகோல்களை பூர்த்தி செய்த பின்னர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை, தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சின் செயலாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சு தொடர்பான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழு கடந்த 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில் மருத்துவர் நிஹால் அபேசிங்கே தலைமையில் கூடியது.
இதன்போது, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் நிறுவன மதிப்பாய்வு இடம்பெற்றது.
தற்போது வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் சேவைகளை மேலும் மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் கூடுதல் ஊழியர்களின் தேவை அதிகரித்து வருவதாக யாழ்ப்பாண மருத்துவமனை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
மருத்துவமனையை தேசிய மருத்துவமனையின் நிலைக்கு மேம்படுத்த வேண்டியதன் அவசியமும் எடுத்துக் கூறப்பட்டது
இந்த நிலையில் தேவையான அளவுகோல்களை பூர்த்தி செய்த பின்னர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை, தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சின் செயலாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.