2025 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இம்முறை நவம்பர் மாதம் முன்வைக்கப்படமாட்டாது என தெரியவருகின்றது.
நவம்பர் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதாலேயே உரிய காலப்பகுதிக்குள் பாதீட்டை முன்வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், நான்கு மாதங்களுக்குரிய செலவுகளை ஈடுசெய்வதற்குரிய இடைக்கால கணக்கறிக்கையொன்று முன்வைக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது.
நவம்பர் மாதம் 14 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெற்று, நவம்பர் 21 ஆம் திகதி புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகும். புதிய அமைச்சரவை நியமனம், திணைக்கள ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகள் முழுமைப்பெற நவம்பர் மாதம் இறுதியாகும்.
எனவே, அதன்பின்னரே முழுமையான வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்படவுள்ளது. மார்ச் மாதமளவில் பாதீடு முன்வைக்கப்படலாம் என தெரியவருகின்றது.