பொதுத்தேர்தலுக்கான பரப்புரை போர் ஆரம்பமாகியுள்ள நிலையில், தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்கென ஆறு சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் நாட்டுக்கு வரவுள்ளன என்று தெரியவருகின்றது.
சார்க், பொதுநலவாய, ஆபிரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழுக்கள் உட்பட எட்டு அமைப்புகளே நாட்டுக்கு வரவுள்ளன.
ஜனாதிபதி தேர்தலின்போதும் மேற்படி அமைப்புகளின் பிரதிநிதிகள், இலங்கையில் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
இலங்கை வரலாற்றில் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்ற தேர்தலாகவும், தேர்தலுக்கு பின்னர் வன்முறை எதுவும் பதிவாகாத தேர்தலாகவும் ஜனாதிபதி தேர்தல் அமைந்தது என சர்வதேச கண்காணிப்பாளர்கள் பாராட்டியிருந்தனர்.
இந்நிலையிலேயே பொதுத்தேர்தலை கண்காணிக்கவும் வரவுள்ளனர்.