இலங்கையில் குறுகிய காலப்பகுதிக்குள் ஐந்து சிறைச்சாலைகளில் ஏற்பட்ட வன்முறை மோதல்களில், சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகள் உட்பட மொத்தம் 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 163க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இவற்றில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட குழப்ப நிலையே மிகப்பெரிய கலவரமாகப் பதிவாகியுள்ளது. இங்கு நடைபெற்ற வன்முறையில் 10 சிறைச்சாலை அதிகாரிகள், 22 கைதிகள் உட்பட 32 பேர் உயிரிழந்தனர்.
அத்துடன், சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ஏனைய சிறைச்சாலைகளில் பதிவான பாதிப்பு விவரங்கள்
மஹர சிறைச்சாலை: கைதி ஒருவர் உயிரிழந்தார்; 6 பேர் காயமடைந்தனர்.
மகசின் சிறைச்சாலை: கைதி ஒருவர் உயிரிழந்தார்; 11 பேர் காயமடைந்தனர்.
குருவிட்ட சிறைச்சாலை: இருவர் கொல்லப்பட்டனர்; 15 பேர் காயமடைந்தனர்.
பள்ளஞ்சேன சிறைச்சாலை: 28 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
நாட்டில் அடுத்தடுத்துச் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட இந்தத் தொடர் மோதல் சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.