கிளிநொச்சி, அக்கராயன்குளம் வனப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பயிற்சி முகாம் ஒன்று இயங்கி வருவதாக உறுதிப்படுத்தப்படாத பொய்யானத் தகவல்களைப் பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் 46 வயது நபர் ஒருவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் (TID) கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோ ஒன்றின் மூலமும், ஊடகவியலாளர் சந்திப்பின் மூலமும் சந்தேகநபர் இந்த போலித் தகவல்களைப் பரப்பியதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறை ஊடகப் பிரிவின் தகவல்படி, அக்கரயன்குளம் காவல் எல்லைக்குட்பட்ட பாலை வனப்பகுதியில் எல்.டி.டி.ஈ பயிற்சி முகாம் இயங்கி வருவதாகக் கூறிய குற்றச்சாட்டின் பேரில், அந்த நபர் ஆகஸ்ட் 18 அன்று கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் பொரலஸ்கமுவ, பெல்லன்வில பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
சந்தேகநபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், தண்டனைச் சட்டம் மற்றும் காவல்துறை அவசரச் சட்டத்தின்கீழ் அவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.