கடந்த சனிக்கிழமை டொங்காவில் ஏற்பட்ட சுனாமி தாக்கம் தொடர்பான புதிய புகைப்படங்கள் வெளி வந்துள்ளன. பசுபிக் தீவு கடற்கரையை சாம்பல் மூடியுள்ளது. கார்கள், சாம்பலால் மூடப்பட்டுள்ளன. கட்டிடங்களின் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன. இந்தப்படங்களை ஐரோப்பிய ஒன்றிய துணை தூதரக அலுவலகம் வெளியிட்டுள்ளது.
நியூசிலாந்து விமானப்படையினர் எடுத்த படங்களில் பல கிராமங்கள் முற்றாக துடைத்தழிக்கப்பட்டிருக்கின்றமை காணக்கூடியதாகவுள்ளன.

வெளி உலகத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது; தொலைத்தொடர்புகளை சீராக்குவதற்கு ஒரு மாதம் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடலுக்கடியிலுள்ள தொலைத்தொடர்பு கேபிளை திருத்தும் பணிகள் இடம்பெற்று வருகினறன. வெளிநாட்டு தூதரகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் மட்டும் செய்மதி தொலைபேசிகளை பாவித்து தொடர்புகளை ஏற்படுத்தி வருகினற்னர்.

பிரதான விமான ஓடுபாதையை சீரமைக்கும் பணிகள் புதன்கிழமை பூர்த்தியாகி விட்டன் விரைவில் விமானங்கள் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..