வடக்கு ஜெர்மனியின் ஸ்டேட் (Stade) நகரில் உள்ள இளைஞர் நல மையத்தில் நடத்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வ#ன்#முறைத் தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளதாகக் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
தாக்குதலுக்கான உள்நோக்கம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி அப்பகுதியைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஹம்பர்க் நகருக்கு அருகில் அமைந்துள்ள இந்த அமைதியான நகரில் இத்தகைய பயங்கரமான கொலைகள் நிகழ்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.