ColomboMain NewsPoliticsSri Lanka

இலங்கை எம்.பிக்கு ஆஸ்திரேலியா கதவடைப்பு!

தனக்கு விசா வழங்குவதற்கு ஆஸ்திரேலியா மறுப்பு தெரிவித்துவருகின்றது என்று இலங்கையில் உள்ள சிங்கள தேசியவாத அரசியல்வாதியான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தான் ஆஸ்திரேலியாவிலேயே கல்வி பயின்றதாகவும், இலங்கை – ஆஸ்திரேலியா நட்புறவு சங்கத்தின் தலைவராக செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐந்தாண்டுகளாக இவ்வாறு விசா மறுக்கப்பட்டுவருவதாகவும், அமெரிக்காவும் விசா வழங்குவதில்லை எனவும் உதய கம்மன்பில மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஏகாதிபத்தியவாதத்துக்கு எதிராக போராடிவருவதாலேயே தனக்கு இவ்வாறு விசா மறுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

Related Articles

Back to top button