ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய ஈரான் கால்பந்தாட்ட அணி வீராங்களைகளில் ஒருவர் தனது முடிவை மாற்றிக்கொண்டு தாயகம் திரும்புவதற்கு திட்டமிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். தனிநபர் சுதந்திரத்தில் ஆஸ்திரேலியா எவ்வித தலையீடும் செய்யாது எனவும் அவர் கூறினார்.
தனது முடிவை மாற்றிய பெண் ஈரானிய தூதரக அதிகாரிகளுடன் வெளியேறியதால் மற்ற வீராங்கனைகளின் பாதுகாப்பு கருதி அவர்கள் ரகசிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய அரசு தமது வீராங்கனைகளை பயமுறுத்தி பிணைக் கைதிகளாக வைத்திருப்பதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டை ஆஸ்திரேலியா நிராகரித்துள்ளது.