ஹார்முஸ் நீரிணைக்கு தமது நாடு போர்க்கப்பல்களை அனுப்பாது என்று ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
போக்குவரத்து அமைச்சர் கேத்தரின் கிங் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
உலகளாவிய எரிபொருள் போக்குவரத்திற்கு முக்கியமான இந்தப் பாதையைப் பாதுகாக்க உதவுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு நாடுகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையிலேயே ஆஸ்திரேலியா மேற்கண்டவாறு முடிவை எடுத்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஆஸ்திரேலியர்களைப் பாதுகாக்க விமானப்படை உதவிகளை ஏற்கனவே வழங்கி வருவதால், மேலதிக இராணுவப் பங்களிப்பு தேவையில்லை என்று ஆஸ்திரேலிய அரசு கருதுகிறது.
மேலும், கப்பல்களை அனுப்புவது தொடர்பாக அமெரிக்காவிடமிருந்து தங்களுக்கு முறையான கோரிக்கைகள் எதுவும் வரவில்லை என்பதையும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.