பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஆஸ்திரேலிய மத்திய வங்கி, வட்டி விகிதத்தை 4.1 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
3.85 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் 0.25 விகிதத்தால் அதிகரிக்கப்பட்டு 4.1 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் இந்தத் தீர்மானம், வட்டி விகித அதிகரிப்பு குறித்த அதிகாரிகளின் எச்சரிக்கை மற்றும் வங்கிகளின் முன்கூட்டிய நடவடிக்கை ஆகியவற்றைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் கச்சா எண்ணெய் விலை உலகளவில் உயர்ந்துள்ள நிலையில், இது ஆஸ்திரேலியாவில் எரிபொருள் விலை ஏற்றத்திற்கு வழிவகுத்துள்ளது.
இந்த எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு வரும் காலங்களில் பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
வட்டி விகிதத்தை உயர்த்துவது என்ற முடிவு வங்கி வாரிய உறுப்பினர்களிடையே கடுமையான விவாதத்திற்குப் பின்னரே ஒரு சிறுபான்மை வாக்கு வித்தியாசத்தில் எடுக்கப்பட்டது.