மெல்பேர்ன் தென்கிழக்கு பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த பெண்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் படுகாயமடைந்த பெண் தற்போது வைத்தியசாலையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக 16 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்த கூடுதல் தகவல்கள் அல்லது சாட்சியங்கள் இருந்தால் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.