ஹார்முஸ் நீரிணைப் பகுதியை திறப்பதற்கு ஈரானுக்கு 48 மணிநேர காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு முக்கியமான இந்தப் பாதையை 48 மணி நேரத்திற்குள் சீரமைக்கத் தவறினால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என டொனால்ட்
ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அவ்வாறு நடந்தால் அமெரிக்காவுடன் தொடர்புடைய எரிசக்தி மையங்களை இலக்கு வைப்போம் என்று ஈரான் அரசு பதிலடி கொடுத்துள்ளது.
இந்த கடல்வழித் தடைகளால் ஏற்கனவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் பெருமளவு உயர்ந்துள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இந்தப் பதற்றமான சூழல் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கு போர் இன்று 23 ஆவது நாளாக தொடர்கின்றது.