குயின்ஸ்லாந்து அரசு, மின்-மிதிவண்டிகள் மற்றும் மின்-ஸ்கூட்டர்களால் ஏற்படும் விபத்துகளைக் குறைக்க 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்குத் தடை விதிக்க புதிய சட்டங்களைக் கொண்டுவருகிறது.
அதிகரித்து வரும் உயிரிழப்புகள் மற்றும் காயங்களைத் தடுக்கும் நோக்கில், இந்த சாதனங்களை இயக்குவதற்கு இனி முறையான ஓட்டுநர் உரிமம் மற்றும் காப்பீடு கட்டாயமாக்கப்பட உள்ளது.
நடைபாதைகளில் செல்லும் மின்-வாகனங்களின் வேக வரம்பு 10 கி.மீ ஆகக் குறைக்கப்படுவதோடு, விதிகளை மீறுவோரைச் சோதிக்கப் காவல்துறைக்குக் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த புதிய சட்டத்தின் கீழ், சிறுவர்கள் விதிமீறலில் ஈடுபட்டால் அவர்களின் பெற்றோர்களே பொறுப்பேற்க வேண்டும் என்ற கடுமையான நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாகனங்களைச் சட்டவிரோதமாக மாற்றம் செய்யும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், பொதுமக்களிடையே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.
புதிய சட்ட திருத்தம் அடுத்தவாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.