ஆஸ்திரேலியாவில் அண்மையில் உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்களால் சுமார் 14 லட்சம் பேர் வீட்டுக் கடன் தவணைகளைச் செலுத்த முடியாமல் நிதி நெருக்கடிக்கு ஆளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
பணவீக்கம் தொடர்ந்து அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த மத்திய வங்கி மேலும் வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்பதால், இந்தத் துயரம் இன்னும் மோசமடையலாம் என்று அஞ்சப்படுகிறது.
தற்போதைய நிலையில் சுமார் 9 லட்சம் ஆஸ்திரேலியர்கள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக ராய் மோர்கன் ஆய்வு நிறுவனம் எச்சரிக்கிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை இந்த நெருக்கடியை மேலும் சிக்கலாக்கியுள்ளன.
இருப்பினும், கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது ஒட்டுமொத்த பாதிப்பு சற்றே குறைந்திருந்தாலும், எதிர்காலத்தில் பணவீக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் சாமானியர்களின் நிதி நிலையை பெரிதும் பாதிக்கும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.