கன்பெராவில் திருடப்பட்ட காரை ஓட்டிச் சென்று, இரண்டு மாணவர்களைக் காயப்படுத்திய டெய்லர் ஹேசல் என்பவருக்கு நீதிமன்றம் பதிமூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இந்த விபத்தின் போது காரில் ஒரு சிறுமி இருந்ததும், பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
குற்றவாளியின் இந்தச் செயல் ஆபத்தானது மற்றும் பொறுப்பற்றது எனக் குறிப்பிட்ட நீதிபதி, அவருக்கு உண்மையான மனவருத்தம் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
அதிவேகமாகவும் அடுக்கடுக்கான விதிமீறல்களுடனும் அவர் காரைச் செலுத்தியது சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.
அவர் சமுதாயத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாகக் கூறி, ஒன்பது ஆண்டுகள் வரை பரோல் வழங்கப்படமாட்டாது என்றும் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.