ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் பற்றாக்குறையை கையாள்வது குறித்து தீவிரமாக ஆராயப்பட்டுவருகின்றது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்க்க தேசிய அளவிலான ஒருங்கிணைந்த திட்டத்தை வகுப்பதே இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
கோவிட் காலத்தைப் போன்ற கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கப் பிரதமர் மறுத்துள்ள நிலையில், பொதுமக்கள் பதற்றமடைந்து எரிபொருளைச் சேமிப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தட்டுப்பாட்டைப் போக்க தனியார் இறக்குமதியாளர்களுக்கு நிதி உதவி வழங்கவும் சர்வதேச அளவில் புதிய எரிபொருள் ஆதாரங்களைக் கண்டறியவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
பல எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் நிலையில் உள்ளதால், நிலைமையைச் சீராக்க அரசும் தனியார் துறையும் இணைந்து செயல்படத் தீர்மானித்துள்ளன.