காசாவில் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலியர் உட்பட ஏழு பணியாளர்கள் இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டு கொல்லப்பட்டு, ஈராண்டுகள் நெருங்கும்வேளை, ஆஸ்திரேலியா பொறுப்புகூறலை வலியுறுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்திற்கு இஸ்ரேல் முழுமையான பொறுப்பேற்க வேண்டும் என்றும், தகுந்த குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் வலியுறுத்துகிறார்.
இஸ்ரேல் நடத்தி வரும் விசாரணையில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதே ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும், இத்தகைய துயரமான நிகழ்வுகளுக்குப் பிறகு, உதவி வழங்கும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஐநா சபையில் ஆஸ்திரேலியா ஒரு முக்கியப் பிரகடனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கு உலகளவில் 110 நாடுகள் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.