Freeman தலைமறைவாக இருந்த காலப்பகுதியில் அவருக்கு உதவினர் எனக் கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆணொருவரும், பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரு பொலிஸ் அதிகாரிகளை சுட்டுக்கொலை செய்த பிறகு Freeman தலைமறைவானார்.
சுமார் 7 மாதங்களுக்கு பிறகு அவர் அண்மையில் பொலிஸ் துப்பாக்கிச்சூட்டில் பலியானார்.
இந்நிலையில் அவர் தலைமறைவாக இருந்த காலத்தில் அவருக்கு உதவியவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஓர் அங்கமாகவே இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றும், அவர்கள் அவரது நண்பர்களாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேல்விவரங்களைச் சேகரிக்க காவல்துறை அதிகாரிகள் தற்போது அந்த இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.