ஆஸ்திரேலியாவின் உயரிய ராணுவ விருது பெற்ற பென் ராபர்ட்ஸ்-மித், போர்க்குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிட்னி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் பணியாற்றியபோது கைதிகள் கொல்லப்பட்ட சம்பவங்களில் இவருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் விசாரணை நடத்தி நடத்திவந்தனர்.
முன்னதாக, ஊடகங்களுக்கு எதிராக இவர் தொடர்ந்த அவதூறு வழக்கில், இவர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையானவை என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பல்வேறு மேல்முறையீடுகள் தோல்வியடைந்த நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகள் காழ்ப்புணர்ச்சி கொண்டவை என்று அவர் தொடர்ந்து மறுத்து வந்தார்.
இந்நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை ஆஸ்திரேலிய ராணுவ வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.