மீண்டெழ முடியாத வகையில் தாக்கி அழிக்கப்படும் என மிரட்டல் விடுத்திருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான்மீதான ராணுவ நடவடிக்கை இரு வாரங்களுக்கு நிறுத்தப்படும் என அறிவித்துள்ளார்.
பாகிஸ்தானால் முன்னெடுக்கப்பட்ட அமைதி முயற்சியின் பிரகாரமே தற்காலிக போர் நிறுத்தத்துக்கு அவர் இணங்கியுள்ளார்.
ஹார்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் திறக்க வேண்டும் என்ற முக்கிய நிபந்தனையுடன், இருவாரகால போர் நிறுத்தத்துக்கு ட்ரம்ப் இணக்கம் வெளியிட்டுள்ளார்.
தங்களின் ராணுவ இலக்குகள் ஏற்கனவே எட்டப்பட்டுவிட்டதாகவும், மத்திய கிழக்கில் நீண்ட கால அமைதிக்கான ஒப்பந்தம் தயாராகி வருவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் வெள்ளிக்கிழமை முதல் நேரடி பேச்சு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மீண்டெழ முடியாத வகையில் ஈரான் அழிக்கப்படும் என ட்ரம்ப் விடுத்திருந்த எச்சரிக்கை உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் தற்காலிக போர் நிறுத்தம் மனித உரிமை ஆர்வலர்களை ஓரளவு ஆறுதல் அடைய செய்துள்ளது.
ஈரானும் போர் நிறுத்தத்துக்கு இணங்கியுள்ளது எனக் கூறப்படுகின்றது.