கிழக்கு மெல்போர்னில் பாக்ஸ் ஹில் பகுதியில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நபரொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை இடம்பெற்றுள்ள இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை வேட்டையில் இறங்கியுள்ளனர்.
இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்ட இலக்காக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பொதுமக்களிடம் இந்தத் துயரச் சம்பவம் குறித்த ஏதேனும் தகவல்கள் இருந்தால், அவற்றை உடனடியாகத் தெரிவிக்குமாறு காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
உயிரிழந்தவர் இன்னும் முறையாக அடையாளம் காணப்படவில்லை. மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.