லெபனான்மீதான தாக்குதல்களை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் வலியுறுத்தியுள்ளார்.
மேற்படி தரப்புகளுக்கு இடையிலான மோதலானது ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான இரு வார கால போர் நிறுத்தத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், ஹார்முஸ் நீரிணையை மீள திறப்பதில் தடை ஏற்படக்கூடும் எனவும் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
போர் நிறுத்தத்துக்கு பிறகு லெபனான்மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 250 இற்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையிலேயே லெபனான்மீதான தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேலை ஆஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது.
அதேவேளை, போர் நிறுத்தத்தில் லெபனானும் உள்ளடக்கப்பட வேண்டும் என ஆஸ்திரேலிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.