சிட்னி மேற்கில், Guilford பகுதியில் நபரொருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கும்பலொன்றினால் நேற்றிரவு கடுமையாக தாக்கப்பட்ட குறித்த நபர் அவரது சொந்த வாகனத்திலேயே வலுக்கட்டாயமாக கடத்தி செல்லப்பட்டுள்ளார்.
கடத்தி செல்லப்பட்ட காருக்கு தீ வைக்கப்பட்டுள்ளதால் அது சேதமடைந்துள்ளது.
பாதிக்கப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க இளைஞன், பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.
இச்சம்பவம் தொடர்பாக ஐந்து ஆண்கள் கைது செய்யப்பட்டு, விசாரணை வேட்டைக்குள் உட்படுத்தப்பட்டுள்ளனர்.