சிட்னி Bondi பயங்கரவாதத் தாக்குதல் நடந்த அதே இடத்தில், துப்பாக்கியால் சுடுவது போல் பாவனை செய்தும் யூதர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளைப் பேசியும் பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞனுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜேன் ஜேசன் வில்லியம் மேக்மில்லன் என்பவருக்கே இவ்வாறு 12 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தனது நண்பருடன் இணைந்து குழந்தைகளையும் ஒரு தந்தையையும் அச்சுறுத்தியதை ஒப்புக்கொண்ட 22 வயதான இந்த இளைஞர், தன் செயல்களுக்காக நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.
அவரது வழக்கறிஞர் போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்பட்ட தடுமாற்றமே இதற்குக் காரணம் என்று வாதிட்டாலும், பொதுமக்களிடையே பயத்தை ஏற்படுத்தியதை நீதிபதி சுட்டிக்காட்டினார்.
ஆஸ்திரேலிய வரலாற்றில் மிகவும் சோகமான ஒரு இடத்தில் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது சமூகத்திற்கு இழைக்கப்பட்ட பெரிய தீங்காகக் கருதப்படுகிறது. எனவே, ஒரு வருட சிறைத்தண்டனையுடன் குறைந்தது ஒன்பது மாதங்கள் கட்டாயமாகச் சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.