ஆஸ்திரேலியாவின் அன்சாக் தின (Anzac Day) நினைவேந்தல் நிகழ்வுகளில் பூர்வகுடி மக்களைக் கௌரவிக்கும் உரையின்போது ஒரு சிறிய குழுவினர் கூச்சலிட்டு இடையூறு விளைவித்துள்ளனர்.
இந்த அநாகரீகமான செயலை பாதுகாப்புத் துறை அமைச்சர், ராணுவ அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
ராணுவத்தில் பணியாற்றிய பூர்வகுடி வீரர்களின் தியாகத்தை இழிவுபடுத்தும் வகையில் இந்தத் தொந்தரவு அமைந்ததாக அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
சிட்னியில் நடந்த இந்த இந்த சம்பவம் தொடர்பில் நபரொருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருப்பினும், அங்கிருந்த பொதுமக்களில் பெரும்பாலோர் பூர்வகுடித் தலைவருக்கு ஆதரவாகக் கைதட்டி தங்கள் மரியாதையை வெளிப்படுத்தினர்.