சிட்னியின் தெற்குப் பகுதியில் உள்ள குழந்தை பராமரிப்பு யத்தில் மூன்று மற்றும் நான்கு வயதுடைய சிறுவர்கள் இருவர் தாக்கப்பட்டுள்ளனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை மதியம் ஒரு நபர் சிறுவர்களின் முகத்தில் அறைந்ததாக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து காவல்துறை விசாரணை மேற்கொண்டது.
இதன் விளைவாக, பெல்மோர் பகுதியில் வசிக்கும் 25 வயது இளைஞர் ஒருவரை காவல்துறையினர் சனிக்கிழமை காலை கைது செய்தனர்.
அந்த நபர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பிணையில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.