வாழ்வாதாரச் செலவுச் சுமைகளைக் குறைக்கும் நோக்கில் வாகனப் பதிவுச் செலவில் 20 சதவீதத் தள்ளுபடி வழங்கும் புதிய திட்டத்தை விக்டோரியா மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கமைய வாகன உரிமையாளர்கள் இதற்கான பணத்தைத் திரும்பப் பெற எதிர்வரும் ஜூன் மாதம் முதல்இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று மாநில பிரீமியர் ஜசிந்தா ஆலன் தெரிவித்துள்ளார்.
இந்தத் தற்காலிகச் சலுகை அதிகபட்சமாக இரண்டு வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதுடன், ஜூலை இறுதிக்குள் விண்ணப்பிப்பது கட்டாயமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்துக்கான கட்டணக் குறைப்புகளைத் தொடர்ந்து, இந்த நிவாரண நடவடிக்கையும் பட்ஜெட்டில் சேர்க்கப்படும் என்று அரசு உறுதியளித்துள்ளது.
எனினும், விண்ணப்ப நடைமுறை மிகவும் சிக்கலாக இருப்பதால் பலர் இந்த வாய்ப்பைத் தவறவிடக்கூடும் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன. மாநிலத்தின் நிதிநிலை உபரியாக இருப்பதால் இந்த நிதி உதவி சாத்தியமானது என்று அரசுத் தரப்பு விளக்கியுள்ளது.