சிட்னிக்கு வடமேற்கே உள்ள Bowen மலைப் பகுதியில் ஏற்பட்ட கோரமான வீட்டுத் தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
அதிகாலையில் தொடங்கிய இந்தத் தீயின் தீவிரத்தால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததால், மீட்புப் படையினர் வீட்டிற்குள் நுழைந்து தேடும் பணியில் பெரும் சவால்களைச் சந்தித்தனர்.
விபத்திலிருந்து ஒரு முதியவர் மற்றும் நான்கு சிறுவர்கள் தப்பித்த நிலையில், நான்கு பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
தீயை அணைக்க சுமார் ஐம்பது தீயணைப்பு வீரர்கள் போராடி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தற்போது உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.